நீலகிரி மலை ரயிலின் நீராவி என்ஜின் புனரமைத்து மீண்டும் மே மாத கோடை சீசனுக்கு முன் இயக்க ரெயில்வே நிர்வாகம் திட்டம்

நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து திருச்சி பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நீராவி என்ஜின் புனரமைத்து, மீண்டும் மே மாத கோடை சீசனுக்கு முன் இயக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவருவதாக அதிகாரிகள் தெரிவி்த்துள்ளனர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து திருச்சி பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நீராவி என்ஜின் புனரமைத்து, மீண்டும் மே மாத கோடை சீசனுக்கு முன் இயக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவருவதாக அதிகாரிகள் தெரிவி்த்துள்ளனர். 



நீலகிரி மலை ரெயில் சேவை ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்டது. இந்த என்ஜின்களில் எக்ஸ் 37384 என்ற எண் கொண்ட நிலக்கரி நீராவி என்ஜின் 1914-ம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்டு, 1918-ம் ஆண்டு நீலகிரி மலை ரெயில் சேவையில் இணைக்கப்பட்டது.

முன்னதாக, பழமையான எக்ஸ் 37384 நிலக்கரி நீராவி என்ஜினை காட்சி பொருளாக வைக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பழமையான நிலக்கரி நீராவி என்ஜினை இயக்க வேண்டும் என்று ரெயில்வே வாரியத்திடம் மனு கொடுத்தனர். இதன்படி காட்சி பொருளாக வைக்கும் திட்டம் கைவிடப்பட்டது.

இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந் தேதி எக்ஸ் 37384 எண் கொண்ட நிலக்கரி நீராவி என்ஜின் மூலம் ரெயில் இயக்கப்பட்டது. இது சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றாலும், உந்து சக்தி குறைவால் அடிக்கடி பழுதானது.



இதனை தொடர்ந்து ரெயில்வே நிர்வாகம் பழமையான நிலக்கரி நீராவி என்ஜினை புனரமைத்து இயக்க முடிவு செய்தது. இதன் அடிப்படையில் திருச்சி பொன்மலையில் உள்ள ரெயில்வே என்ஜின் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பணிகள் முடிந்தால் வரும் மே மாத கோடை சீசனில் இந்த மலைரயில் என்ஜினை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...