திருப்பூர் : திருப்பூரில் 12 லட்சம் கடன் வாங்கிய பெண்ணிடம் 16 லட்சம் ரூபாய் வரை வட்டி கட்டிய பின்பும், மீண்டும் 12 லட்சம் பணம் கேட்டு கந்துவட்டி கும்பல் கொலை மிரட்டல் விடுத்ததாக, பெண் சிசிடிவி காட்சிகள் மற்றும் தொலைபேசி ஆதாரங்களை கொண்டு திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

திருப்பூர் மன்னரை பகுதியை சேர்ந்தவர் நவீன் சங்கர் மற்றும் அவர் மனைவி சுபத்ரா, இருவரும் பின்னலாடை தொழில் சார்ந்த தையலகம் வைத்து கடை நடத்தி வரும் நிலையில், கடந்த வருடம் அக்ஷயா பைனான்ஸ் வேலுச்சாமியிடம் 12 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதுவரை, வட்டி மட்டும் 16 லட்சம் ரூபாய் கட்டிய நிலையில், மீண்டும் அசல் தொகையான 12 லட்சம் ரூபாய் கொடுத்தாக வேண்டும், என்று சுபத்ரா மற்றும் நவீன் சங்கரை தொடர்ந்து அந்த கந்து வட்டியினர் மிரட்டி வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், சுபத்ரா நடத்தி வரும் தையலகம் சென்று அந்த கந்து வட்டி பைனான்சியர் வேலுச்சாமி கீழ்தரமான வார்த்தைகளால் பேசி வருவதாகவும், ஒரு நாளில் பணம் கொடுக்காவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுக்கும் கந்துவட்டி கும்பலிடமிருந்து பாதுகாப்பு வழக்க கோரி திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தார்.
அந்த மனுவுடன், அவர்கள் தன்னை மிரட்டிய சிசிடிவி காட்சிகள் மற்றும் தொலை பேசியில் பேசிய ஆதாரங்களை, காவல் ஆணையரிடம் ஒப்படைத்தார்.