கோவை : சுக்கிரவார் பேட்டையில் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் தொடர்பாக தலைமறைவாக இருக்கும் வடமாநில இளைஞரை பிடிக்க மாநகர போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் பவானி சிங்(27).இவர் கடந்த 10 ஆண்டுகளாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பிளைவுட் கடையில் பணி புரிந்து வந்தார். இப்படியிருக்க பிளைவுட் கடையில் இருந்து 2மாதங்களுக்கு முன்பு நின்று விட்டு வேறு வேலை தேடி வந்தார்.
மேலும் இவர் சுக்கிரவார் பேட்டையில் உள்ள தனது நண்பர்கள் அறையில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளார்.
இப்படியிருக்க அவரது பையில் சந்தேகத்துக்கிடமான பொருள் இருப்பதாக அவரது நண்பர்களுக்கு தெரியவந்தது.
இதையடுத்து அறையிலிருந்த நண்பர்கள் பைக்குள் இருப்பது துப்பாக்கி என அறிந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வெரைட்டி ஹால் போலீசார் பையிலிருந்து நாட்டு துப்பாக்கி மற்றும் இரண்டு துப்பாக்கி குண்டுகளை மீட்டனர்.
பின்னர் இரண்டாவது கட்ட தேடுதலில் மீண்டும் இன்னொரு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
இப்படியிருக்க தலைமறைவாக இருக்கும் பவானிசிங்கை பிடிக்க மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் உத்தரவின் பேரில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்படை போலீசார் பவானிசிங் முன்னே வேலை செய்த நிறுவங்களில், அறையில் உள்ள நண்பர்களிடம் என பல கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல துப்பாக்கியை விற்பனை செய்யும் நோக்கில் வைத்துள்ளாரா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தில் ஒரு தனிப்படை போலீசார் ராஜஸ்தானுக்கும், மற்றொரு தனிப்படை போலீசார் கோவையிலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.