நீலகிரி : நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே குஞ்சப்பனை பகுதியில் சாலையில் குட்டியுடன் உலாவந்த காட்டு யானைகளால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.

காேத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் குஞ்சப்பனை பகுதியி்ல் சாலையில் காட்டு யானைகள் வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், இன்று மதிய வேலையில் குட்டியுடன் கூடிய 3 யானைகள் சாலையில் நடுவே வந்ததால் வாகன ஓட்டிகள் ஆங்காங்கே தங்களது வாகனங்களை நிறுத்தினர். மேலும், சிலர் வாகனங்களை விட்டு இறங்கி அருகில் சென்று பாேட்டாே எடுத்தனர்.
சிறிது நேரம் அதே இடத்தில் உலா வந்த யானைக் கூட்டம், பின்னர் அருகிலிருந்த காட்டுப் பகுதிக்குள் சென்றன.
இதனால், அந்த சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வனத்துறையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு சாலையில் காட்டு யானைகள் வராமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.