கோவை : லாட்டரி மார்ட்டின் நிறுவன காசாளர் பழனிச்சாமி சந்தேக மரணம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவின்படி ஏடிஎஸ்பி அனிதா வருமான வரித்துறையினரிடம் தொடர் விசாரணைகள் மேற்கொண்டு வருகிறார்.

மார்டின் குருப் ஆப் நிறுவனத்தில் சுமார் 25 வருடமாக காசாளராக பணிபுரிந்து வந்த துடியலூர் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (45) கடந்த மே மாதம் 3ம் தேதி வெள்ளியங்காடு பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.
மார்ட்டின் குரூப் ஆப் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மற்றும் பழனிச்சாமியிடம் நடைபெற்ற விசாரணையை அடுத்து அவரது மரணம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி பழனிச்சாமியின் பிரேத பரிசோதனை நடைபெற்றது.
அதேபோல தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் இந்த வழக்கை ஏடிஎஸ்பி பொறுப்பில் உள்ள அதிகாரி விசாரிக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது.
அதைதொடர்ந்து ஏடிஎஸ்பி அனிதா கடந்த இரண்டு மாத காலமாக இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக பழனிச்சாமியின் உறவினர்கள், மார்ட்டின் நிதி நிறுவன பொறுப்பாளர்கள், வருமான வரித்துறையினர் என பல்வேறு கட்ட விசாரணைகளை மேற் கொண்டுள்ளார்.
இந்தநிலையில் இன்று பழனிச்சாமி சந்தேக மரணம் தொடர்பாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வருமான வரித்துறை அதிகாரிகள் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டார்.
மேலும் வருமானவரித்துறை அதிகாரிகள் ஏடிஎஸ்பி அனிதாவிடம் தங்களது விளக்கங்களை அளித்தனர்.
இந்த விசாரணையை தொடர்ந்து எழுத்து பூர்வமாக விளக்கங்களை சமர்பிக்க வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ஏடிஎஸ்பி அனிதா அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
பழனிச்சாமி மரணம் தொடர்பாக தொடர்ந்து ஏடிஎஸ்பி அனிதா தலைமையிலான போலீசார் துரிதமாக விசாரணைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.