திருப்பூர் : பல்லடம் மாதப்பூர் அடுத்த நல்லா கவுண்டம்பாளையம் பகுதியில் மினி பஸ் கவிழ்ந்ததில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மினி பஸ் டிரைவர் குடிபோதையில் இருந்ததாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வளையபாளையம் பகுதியிலிருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் மினி பஸ் ஒன்று பல்லடம் நோக்கி இன்று காலை வந்தது. மாதப்பூர் அடுத்த நல்லாகவுண்டம்பாளையம் பகுதியில் மினி பஸ் வந்தபோது எதிரே பல்லடத்தில் இருந்து தொட்டம்பட்டி நோக்கி வந்த மினி பஸ்க்கு வழி விடுவதற்காக கணபதி மினி பஸ் டிரைவர் வண்டியை ரோட்டிலிருந்து மண் பாதையில் கீழே இறங்கினார்.
ஒரு வாகனம் மட்டுமே செல்லக்கூடிய அளவில் ரோடு இருந்ததால், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த மினி பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மினி பஸ்ஸின் கண்ணாடிகளை உடைத்து பஸ்சில் சிக்கி இருந்த பயணிகளை மீட்டனர் பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் மினி பஸ்சில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர் அப்போது அப்பகுதி மக்கள் மினி பஸ் ஓட்டுனர் குடிபோதையில் இருந்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாகவும், இது வாடிக்கையாக நடந்து வருவதாகவும் மினி பஸ் ஓட்டுனர் எப்பொழுதும் குடித்து விட்டுத்தான் வாகனத்தை ஓட்டுவதாக பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
மேலும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால், மினி பஸ் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பிரபாகரன் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
பின்பு, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால், போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.