பாஜக தலைவர் யார்? விரைவில் அறிவிப்பு வருமென மாநில பொதுச்செயலாளர் தகவல்

கோவை : "ஓவ்வொரு பகுதி கிளைகளில் தேர்தல் நடத்தப்பட உள்ளதால், அமைப்பு தேர்தல் பணிகளில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்.

கோவை : "ஓவ்வொரு பகுதி கிளைகளில் தேர்தல் நடத்தப்பட உள்ளதால், அமைப்பு தேர்தல் பணிகளில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். 

மேலும், காஷ்மீர் விவகாரத்தில் 370 நீக்கப்பட்டதில் பிரதமரின் நடவடிக்கை குறித்து விளக்குவதற்காக மாவட்டம் தோறும் முக்கிய நிர்வாகிகளை கொண்டு பொது கூட்டம் மற்றும் தெருமுனை பிரச்சாரங்கள் நடத்தப்பட உள்ளது", என கோவையில் காந்திபுரம் பகுதி பா.ஜ.கட்சி அலுவலகத்தில் மாநிலபொதுச் செயலாளர், வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர் செப்டம்பர் 17 பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு சேவை வாரம் அனுசரிக்கப்பட்டு, இதில் மருத்துவ முகாம்கள், பிளாஸ்டிக் எதிர்ப்பு நிகழ்வுகள், மாற்றுதிறனாளிகளுக்கான மேம்பாட்டு பணிகள், மரம் நடுவது என பல நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளோம், என தெரிவித்தார். 

நவம்பர் முதல் வாரத்தில் மாநில தலைவருக்கான தேர்தல் நடைபெறுகின்றது. இடையில், மாநில தலைவர் அறிவிக்கப்படவும் வாய்ப்புண்டு எனக் கூறிய வானதி சீனிவாசன், மாநில தலைவர் இல்லை என்றாலும் கட்சி பணிகளில் எந்த சுணக்கமும் இல்லை என்றார்.

"மாநில தலைவராக தேர்வு செய்ய வாய்ப்பு இருக்கும் பட்டியலில் 15 பேர் வரை இருக்கின்றனர். பொருளாதார பாதிப்பு காரணமாக வேலை இழப்பு இருப்பதாக தொழில் அமைப்புகள் சொல்லவில்லை. இரவு பணிகள் மட்டும் நிறுத்தி வைக்கபட்டு விட்டதாக தொழில் அமைப்புகள் தெரிவிக்கின்றனர்.பொருளாதார சரிவு என பீதியை கிளப்பி விடுவதற்கான தகவல்கள் பரப்பபடுகின்றன. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள மந்த நிலையால் இந்தியாவிற்கு பாதிப்பு வரலாம் என்ற நிலை இருக்கிறது. 20 நாட்களுக்குள் நிலைமை சீராக வாய்ப்பு இருக்கின்றது", என்றார் தற்போதைய நிலையில் நம்பிக்கை இழக்காமல் தொழில் அமைப்புகள் வங்கிகளில் பேச தீர்வு காண வேண்டும். இந்த மாத இறுதிக்குள் பொருளாதார நிலையில் உள்ள பாதிப்புகள் சரியாகும், என எதிர்ப்பார்க்கிறேன், என்றார்.

"சர்க்கரை ஆலைகள் தற்போது நெருக்கடியில் இருந்து வருகிறது. அதை சரி செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தொழில்களுக்கு பாதிப்பு இல்லை என சொல்லவில்லை, முற்றிலுமாக முடங்கி விட வில்லை என்பதை தான் செல்கிறேன். இப்போது ஏற்பட்டுள்ள சிறு பாதிப்புகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. ஜாப் ஆர்டருக்கான ஜி.எஸ்.டியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என சிறு, குறு தொழில் அமைப்பினரின் கோரிக்கை தொடர்பாக விரைவில் ஒரு நல்ல அறிவிப்பு வரும்", என்றார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...