திருப்பூர் : விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி காவல்துறையினருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக, இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார் அவர், "இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் சுமார் ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமான விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பாக கொண்டாடபட்டதாக தெரிவித்தார். திருப்பூரில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் , திருப்பூர் தொழில் துறையை பாதுகாக்க மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி போராடும் என்றால் அவர்களுடன் இணைந்து போராட இந்து முன்னணியும் தயார்", எனவும் தெரிவித்தார்.
மேலும் திருப்பூரில் திமுகவினர் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தருவதாகவும் குற்றம்சாட்டினார்.