மேட்டுப்பாளையம் மலை ரயிலுக்கு புதிய பெட்டிகள் சென்னையிலிருந்து கொண்டுவரபட்டது

கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினந்தோறும் உதகைக்கு மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. மலைகளின் நடுவே அடர்ந்த வனத்தில் பயணிக்கும், உலக பரம்பரியமிக்க இந்த மலை ரயிலில் பயணித்து இயற்கை அழகினை ரசிக்க உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினந்தோறும் உதகைக்கு மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. மலைகளின் நடுவே அடர்ந்த வனத்தில் பயணிக்கும், உலக பரம்பரியமிக்க இந்த மலை ரயிலில் பயணித்து இயற்கை அழகினை ரசிக்க உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

இந்நிலையில் மலை ரயில் சுற்றுலாவை ஊக்கப்படுத்தும் வகையில் தெற்கு ரயில்வே மலை ரயிலை நவீனபடுத்தி வருவதுடன் சுற்றுலா பயணிகளை கவர சிறப்பு மலை ரயில் சேவைகளை ஏற்படுத்தி வருகிறது. மேலும், கூடுதல் ரயில் பெட்டிகளை இணைக்கவும் திட்டமிட்டு அதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக, இதுவரை இருந்து வந்த மரத்தால் ஆன பழைய ரயில் பெட்டிகளை தவிர்த்து தற்போது புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ரயில் பெட்டிகள் சென்னை பெரம்பலூரில் உள்ள ஜ.சி.எப் தொழிற்சாலையில் தயாரிக்கபட்டு வந்தன. 

மொத்தம் 15 ரயில் பெட்டிகள் தயாரிக்கபட்ட நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கொண்டு வரபட்ட நிலையில், இன்று மேலும் நான்கு பெட்டிகள் கொண்டுவரபட்டன. இதில் இரும்பு மற்றும் கண்ணாடிகளை அதிக அளவில் பயண்படுத்தபட்டு அழகான வடிவில் நவீன பெட்டிகள் அமைக்கபட்டுள்ளன. 



மேலும் எடை குறைவான முறையில் தயாரிக்கபட்ட இந்த பெட்டிகள் சிறப்பு கூட்ஸ் ரயில் மூலம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு இன்று கொண்டுவரபட்டது. பின்னர், திருச்சி பொண்மலை ரயில்வே பணிமலையில் இருந்து ராஜாளி என்ற ராட்சத கிரேன் கொண்டுவரபட்டு மேட்டுப்பாளையம் ரயில்வே அதிகாரிகள் முன்னிலையில் இன்று புதிய ரயில் பெட்டிகள் இறக்கபட்டன. 

தண்டவாளத்தில் இறக்கிவைக்கபட்ட ரயில் பெட்டிகளை ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர். விரைவில் இந்த பெட்டிகளை மலை ரயிலில் இணைத்து சோதனை ஓட்டம் நடத்தபட்ட பின்னர் பயண்பாட்டிற்கு கொண்டுவர உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...