திருப்பூர் : "விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் பொதுமக்களிடையே வன்முறையை ஏற்படுத்தும் இந்து முன்னணி அமைப்பை தடை செய்ய வேண்டும்" என பெரியாரிய இயக்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூரில் இன்று நடைபெற்றது.

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது திருப்பூர் அங்கேரிபாளையம் சாலையில் நன்கொடை தராத காரணத்தால் பின்னலாடை உற்பத்தி நிறுவனத்திற்குள் புகுந்த வன்முறையில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பை கண்டித்தும் இதில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும், என வலியுறுத்தியும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரியாரிய இயக்கங்கள் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், செய்தியாளர்களிடம் பேசிய கு. ராமகிருட்டிணன், "வடமாநில கலாச்சாரங்களை தமிழகத்தில் புகுத்தி அதன் மூலம் மக்களிடையே வன்முறையை ஏற்படுத்தும் இந்து முன்னணி அமைப்பை தடை செய்ய வேண்டும்", என கேட்டுக்கொண்டார்.

அனுமதியின்றி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெரியார் இயக்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.