மேட்டுப்பாளையத்தில் குழந்தையின் உடலில் ஊசி இருந்த விவகாரம் ; மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவ குழுவினர் விசாரணை

கோவை : மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்ட விவகாரம் தொடர்பாக குழந்தையின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் இன்று சுகாதாரத்துறை இணை இயக்குனர் கிருஷ்ணா தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

கோவை : மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்ட விவகாரம் தொடர்பாக குழந்தையின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் இன்று சுகாதாரத்துறை இணை இயக்குனர் கிருஷ்ணா தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர்கள் பிரபாகரன் (28) மற்றும் மலர்விழி (20) தம்பதியினர். இதில் மலர்விழி தனது இரண்டாவது பிரசவத்திற்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவருக்கு கடந்த 20ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து 21ஆம் ஆம் தேதி குழந்தைக்கு இடது கையில் ஒரு ஊசியும் இடது காலில் ஒரு ஊசியும் போடப்பட்டது.

இந்த ஊசி போடப்பட்ட நாளில் இருந்து தொடர்ந்து குழந்தை அழுதுகொண்டே இருந்தது. ஆனால் பெற்றோர் குழந்தை அழுவதற்கு என்ன காரணம் என அறிய முடியாமல் தவித்தனர். இதைத்தொடர்ந்து குழந்தையை குளிக்க வைக்கும் பொழுது தொடையில் ஊசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பெற்றோர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து காவல்துறை இடமும் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.



இப்படியிருக்க இந்த புகாரைத் தொடர்ந்து இன்று கோவை சுகாதாரத்துறை இணை இயக்குனர் கிருஷ்ணா தலைமையில் நான்கு பேர் கொண்ட மருத்துவ குழுவினர் பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் மருத்துவமனை செவிலியர் மற்றும் மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இந்த சம்பவத்தில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...