நீலகிரி : குன்னூர் அருகே ஆதிவாசி கிராமத்தில் அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் ஆதரவாளர் டேனிஸ் உதகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள நெடுகல்கொம்பை ஆதிவாசி கிராமத்திற்கு சென்ற டேனிஸ் மீது அரசுக்கு எதிராக மக்களிடம் பேசியது, போஸ்டர்கள் ஒட்டியது தொடர்பாக கொலக்கொம்பை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யபட்டது.
இப்படியிருக்க கடந்த மாதம் 29-ம் தேதி கொலக்கொம்பை காவல் துறையினரால் டேனிஸ் கைது செயப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில் நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் மாவோயிஸ்ட் ஆதரவாளர் டேனிஸ் இன்று உதகை நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த டேனிஸ் இளைஞர்களும், மாணவர்களும் காட்டையும் நாட்டையும் விற்கும் மோடிக்கு எதிராக போராடுவோம் எனவும் தனி தமிழ்நாடு அமைக்க ஒன்றிணைவோம் எனவும் காஷ்மீரை பாதுகாக்க வேண்டும் எனவும் கோஷம் எழுப்பினார்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை வரும் 26 ம் தேதி மீண்டும் ஆஜராக மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி வடமலை உத்தரவிட்டார்.