கோவையில் விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தின் போது கலகம் செய்யும் நோக்கில் கோஷமிட்ட விஷ்வ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த 3 பேர் கைது

கோவை : கோவையில் விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தின் போது இஸ்லாமியர்களை குறித்து அவதூறாக கோஷம் எழுப்பி கலகம் செய்யும் நோக்கில் செயல்பட்ட விஷ்வ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை மாநகர போலீசார் கைது செய்தனர்.


கோவை : கோவையில் விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தின் போது இஸ்லாமியர்களை குறித்து அவதூறாக கோஷம் எழுப்பி கலகம் செய்யும் நோக்கில் செயல்பட்ட விஷ்வ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை மாநகர போலீசார் கைது செய்தனர்.

கோவையில் கடந்த ஆறாம் தேதி விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர். இப்படி கலந்துகொண்ட இளைஞர்களில் ஒரு சில குழுவினர் இஸ்லாமியர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். காவல்துறை அறிவிப்பை மீறியும் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.



இப்படியிருக்க வி.எச்.பி அமைப்பை சேர்ந்தவர்கள் இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக கோஷம் எழுப்பி ஊர்வலம் சென்றதாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து புகார்கள் எழுந்தது.

இதனையடுத்து விஎச்பி நிர்வாகிகள் லோகநாதன், அரவிந்த், சிவசாமி என்ற மூன்று பேரை ஆர்.எஸ்.புரம் போலிசார் கைது செய்தனர்.

இவர்கள் மீது கலகம் செய்வதற்கு தூண்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக செயல்படுதல் என்ற இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

சமூக வலைதளங்களில் இருந்த காணொளி அடிப்படையில் உதவி ஆய்வாளர் மோகனகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.புரம் காவல்துறையினர் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...