கோவையில் மர்மமான முறையில் கிடந்த 2 துப்பாக்கிகள் ; துப்பாக்கியை பறிமுதல் செய்த காவல் ஆய்வாளர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தராததால் இடமாற்றம்

கோவை : சுக்ரவார் பேட்டை பகுதியில் கிடந்த இரண்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்த காவல் ஆய்வாளர் உயரதிகாரிகளுக்கு தகவல் தராததையடுத்து இடமாற்றம் செய்யப்பட்டார்.

கோவை : சுக்ரவார் பேட்டை பகுதியில் கிடந்த இரண்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்த காவல் ஆய்வாளர் உயரதிகாரிகளுக்கு தகவல் தராததையடுத்து இடமாற்றம் செய்யப்பட்டார்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் பவானி சிங்(27).இவர் கடந்த 10 ஆண்டுகளாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பிளைவுட் கடையில் பணி புரிந்து வந்தார். இப்படியிருக்க பிளைவுட் கடையில் இருந்து 2மாதங்களுக்கு முன்பு நின்று விட்டு வேறு வேலை தேடி வந்தார்.

மேலும் இவர் தனது நண்பர்கள் அறையில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளார்.

இப்படியிருக்க அவரது பையில் சந்தேகத்துக்கிடமான பொருள் இருப்பதாக அவரது நண்பருக்கு தெரியவந்தது.

இதையடுத்து அறையிலிருந்த நண்பர்கள் பைக்குள் இருப்பது துப்பாக்கி என அறிந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வெரைட்டி ஹால் போலீசார் பையிலிருந்து நாட்டு துப்பாக்கி மற்றும் இரண்டு துப்பாக்கி குண்டுகளை மீட்டனர்.

பின்னர் இரண்டாவது கட்ட தேடுதலில் மீண்டும் இன்னொரு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து தகவலறிந்து தலைமறைவான குற்றவாளிக்கு போலீசார் வலை வீசி உள்ளனர்.

இப்படியிருக்க பறிமுதல் செய்த துப்பாக்கிகள் குறித்து காவல் ஆய்வாளர் உயர் அதிகாரிகளுக்கு முறையான தகவல் சொல்லவில்லை என மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் ஆய்வாளர் செந்தில்குமார் தற்காலிகமாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...