கோவையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஜக்கு (எ ) ஜெகதீசன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்

கோவை : கோவையைச் சேர்ந்த இணையதள வடிவமைப்பாளர் ஜெகதீஷ் என்ற ஜக்கு (28).

கோவை : கோவையைச் சேர்ந்த இணையதள வடிவமைப்பாளர் ஜெகதீஷ் என்ற ஜக்கு (28).

மாற்றுத்திறனாளியான இவர் தினமும் பல்வேறு சமூக சேவைகளை செய்து வந்தார்.

உடலில் உள்ள குறையை குறையாக நினைக்காமல் தன்னிடம் உள்ள திறமைகளை கொண்டு நிறையாக வாழ்ந்தவர் என்று சொன்னால் மிகையாகாது.

இவர் சமூக சிந்தனையுடன் தன்னம்பிக்கையுடன் தனது வாழ்க்கையை நடத்தி வந்தார்.

இவர் சமூக ஆர்வலர், வலைப்பதிவாளர், இணையதள வடிவமைப்பாளர் ,எழுத்தாளர் என பல பரிணாமம் கொண்டவர்.

அதேபோல சிறந்த வாசிப்பாளர், எழுத்தாளர், கவிஞர், போன்ற பல அடையாளங்களையும் கொண்டவர்.

ஜெகதீஷ் கண் தானம், உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்துள்ளார், மேலும் கண் தானம், உடல் உறுப்பு தானம் செய்வதன் முக்கியத்துவம் குறித்து நண்பர்களிடம், உறவினர்களிடம், மக்களிடமும் விழிப்புணர்வும் ஏற்படுத்தியுள்ளார்.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தொடர்ந்து உளவியல் ஆலோசனை, அவர்களின் தாழ்வு மனப்பான்மையை போக்கி, அவர்களின் ஆற்றலை இந்த உலகத்திற்கு வெளிப்படுத்த உதவி வந்தவர் ஜெகதீஷ். 

இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம், ஜல்லிக்கட்டு போராட்டம் என சமூக பிரச்னைகளுக்காக நடக்கும் போராட்டத்தில் பங்கெடுப்பதிலும் முதன்மையாக் இருந்தவர்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில் தற்போது உடல்நிலை மோசமாகி பரிதாபமாக உயிரிழந்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...