திருப்பூர் : திருப்பூரில் போலி ஆவணம் தயாரித்து சொத்துகளை மோசடி செய்ய முயன்றதாக வழக்கறிஞர்கள் 2 வரை சிபிசிஐடி போலீசார் நேற்று கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் மதியழகன், இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் தனது தந்தை பெயரில் திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் இருந்த சொத்துகளை கர்நாடக சிவில் நீதிமன்ற உத்தரவு போல் போலி ஆவணங்கள் தயாரித்து சிலர் அபகரித்து உள்ளதாகவும், விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
அவரின் புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு, இந்த வழக்கு திருப்பூர் சிபிசிஐடி வசம் விசாரணைக்கு வந்தது. வழக்கில் தொடர் விசாரணை நடத்தி வந்த சிபிசிஐடி போலீசார் இது தொடர்பாக தாராபுரத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ராமசாமி (78), அவரது உதவி வழக்கறிஞர் ஜனார்த்தனன்(34) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
இது குறித்து சிபிசிஐடி போலீசார் கூறும் போது:
இந்த விஷயம் தொடர்பாக முதற்கட்டமாக வழக்கறிஞர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு திருப்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆஜர்படுத்தப்பட்டவர்களில் ராமசாமிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.