நீலகிரி : நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபரை தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த இரும்பு பாலம் புலியம் வயல் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ராமுண்ணி. இவரது மகன் ராஜேஷ் (29), மற்றும் உறவினர்கள் மது, ஆனந்தன் ஆகியோர் தங்களது விவசாய தோட்டத்தில் விளைந்த வாழைத்தார்களை கூடலூரில் விற்பனை செய்து விட்டு வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.

அப்பாேது, பாண்டியாற்றின் கரையோரம் திடீரென மண்திட்டு இடிந்து, ராஜேஷ் ஆற்றில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் வந்த தீயணைப்பு துறையினர், ஆற்றில் மூழ்கி காணாமல் போன ராஜேஷை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.