கோவை : 2019ம் ஆண்டிற்கான ஊதிய உயர்வை வழங்காத ஜிவிகே ஒப்பந்த நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஓராண்டுக்கு மேல் பணிபுரியும் அனைத்து ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்திட வேண்டும், 12 மணி நேரமாக இருக்கும் வேலை நேரத்தை எட்டு மணி நேரமாக குறைக்க வேண்டும், பெண் ஊழியர்களுக்கு 26 வாரம் பேறுகால விடுப்பு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பதிமூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கம் இணைப்பு (தொமுச) பேரவை சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில தலைவர், இருளாண்டி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். பின்னர், செய்தியாளர்களிடம் கூறுகையில் "இரவு பகல் பாராமல் பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என மனப்பான்மையுடன் அயராது உழைத்து வரும் 108 அவசர ஊர்தி ஓட்டுனர்களின் நியாமான கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும்", என வேண்டுகோள் விடுத்தனர்.
ஜிவிகே இ.எம்.ஆர்.ஐ நிர்வாகமானது ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை திணிப்பதை தவிர்த்து மக்கள் சேவையில் அக்கறை செலுத்த வேண்டும், எனவும் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்ட தலைவர் பொய்யாமொழி, செயலாளர் குணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.