கோவை : கோவை தெற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன் உடல் நல குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருவதையடுத்து, அவரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.

கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் கோவையில் உள்ள குப்புசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று மாலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனனை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். இந்த சந்திப்பின்போது அமைச்சர் எஸ் பி வேலுமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இப்படியிருக்க அம்மன் அர்ஜுனனின் உடல் நலம் தேறி வருவதையடுத்து அவர் விரைவில் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.