உதகை படகு இல்ல ஏரியில், தாய், மகள் குதித்து தற்கொலை

நீலகிரி : உதகை அருகே நொண்டி மேடு பகுதியில் வசிக்கும் தாயும் மகளும் உதகை படகு இல்ல ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி : உதகை அருகே நொண்டி மேடு பகுதியில் வசிக்கும் தாயும் மகளும் உதகை படகு இல்ல ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



உதகையில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள நொண்டி மேடு பகுதியில், நிர்மலா வயது (35), அவர் மகள் ஹரிணியுடன் வயது (6) வசித்து வந்தார். தற்பொழுது ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் ஹரிணியும் நிர்மலாவும் நேற்று மாலை முதல் காணவில்லை என அவர்களது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து இன்று உதகை படகு இல்ல ஏரியில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் படகு இல்ல ஏரியில் இரு உடல்கள் மிதப்பதை கண்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

பின்பு உறவினர்களுக்கு தெரியப் படுத்தி அவர்கள் இறந்த இருவரும் நிர்மலா மற்றும் ஹரிணி தான் என உறுதிப்படுத்திய பின்பு அவர்களிடம் இருவரின் உடலையும் ஒப்படைத்தனர்.

இறந்த நிர்மலாவின் கணவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்ட நிலையில் மிகவும் மன அழுத்தமாக இருந்த நிர்மலா குழந்தையுடன் உதகை படகு இல்ல ஏரியில் குதித்து தற்கொலை செய்து காெண்டிருக்கலாம் என்ற காேணத்தில் காவல்றையினர் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...