மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு தடுப்பூசி போட்டு ஊசி முறிந்த விவகாரத்தில் மருத்துவமனையில் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி காவல்நிலையத்தில் வழக்கறிஞர்களுடன் வந்து பெற்றோர் புகார் அளித்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் எம்.எஸ்.ஆர் புரம் பகுதியை சேர்ந்த மலர்விழி பிரபாகரன் தம்பதியினருக்கு கடந்த 21ம் தேதி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இதில் குழந்தைக்கு கை மற்றும் தொடை பகுதியில் தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், ஊசி முறிந்து தொடை பகுதியில் நின்றது. பின்னர் அதனை பெற்றோர்கள் பார்த்து அகற்றினர்.
பின்னர் இது குறித்து, அலட்சியமாக சிகிச்சை அளித்த சம்பந்தப்பட்ட மருத்துவர் மற்றும் செவிலியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரிடம் புகார் கடிதம் அளித்தனர். இந்த நிலையில் அது குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி குழந்தையின் பெற்றோர்கள் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்தனர்.
வழக்கறிஞர்களுடன் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு வந்த குழந்தையின் தந்தை பிரபாகரன் சம்பந்தப்பட்ட பணி மருத்துவர் மற்றும் செவிலியர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தனர். பின்னர் பேசிய குழந்தையின் தந்தை பிரபாகரன், குழந்தைக்கு நேர்ந்த அவலம் குறித்து மருத்துவமனையில் புகார் அளித்து இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை எனவே கடும் மன உளைச்சல் ஏற்பட்டு தனது கும்பமே இதனால் பாதிக்கப்பட்டது. எனவே சட்டப்படி நடவடிக்கை எடுக்க தற்போது புகார் அளித்துள்ளதாகவும் இனி வேறு எந்த குழந்தைக்கும் இது மாதிரியான நிகழ்வுகள் ஏற்படுவதை அனுமதிக்கக்கூடாது என தெரிவித்தார்.
மேலும். இது குறித்து பேசிய வழக்கறிஞர்கள், தொடர்ந்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் போதிய பரிசோதனை இல்லாமல் மருந்துகள், இது போன்ற ஊசிகளை பயன்படுத்துவதாக கூறினர். இது குறித்து பலமுறை அவர்களது கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டும் அலட்சியமாக இருப்பதாக கூறிய வழக்கறிஞர் ரகுமான், அரசும் சுகாதாரத்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.