கோவை : மேட்டுப்பாளையத்தில் பச்சிளம் குழந்தைக்கு தடுப்பூசி போட்டு ஊசி முறிந்த விவகாரத்தில் மூன்று மருத்துவர்கள் மற்றும் ஒரு செவிலியரிடம் சுகாதாரத்துறை தரப்பில் விளக்கம் கேட்டுள்ளது

மேட்டுப்பாளையம் எம்.எஸ்.ஆர் புரம் பகுதியினை சேர்ந்த பிரபாகரன், மலர்விழி தம்பதி, மலர்வழி கருவுற்றிருந்த நிலையில் பிரசவத்திற்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். கடந்த 21ம் தேதி மலர்விழிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் அவர்களது, பச்சிளம் குழந்தைக்கு கடந்த மாதம் 31ம் தேதி குழந்தைக்கு கை மற்றும் தொடை பகுதியில் தடுப்பூசி ஊசி போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரசவ வார்டில் செவிலியர்கள் தடுப்பூசி போட்டபோது, ஊசியின் ஒரு பகுதி முறிந்து குழந்தையின் தொடை பகுதிக்குள்ளே நின்றுள்ளது. இதனை கவனிக்காத செவிலியர்கள், மலர்விழி மற்றும் குழந்தையை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அனுப்பினர். குழந்தையின் தொடை பகுதியில் ஊசி சிக்கியிருந்ததால் அந்த பகுதி வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தை அழுது கொட்டிருக்கவே குழந்தையை குளிப்பாட்டும் போது அதனை கண்டுபிடித்த பெற்றோர்கள் ஊசியை அகற்றியதோடு மேட்டுப்பாளையம் தலைமை மருத்துவரிடம் புகார் அளித்தனர். மேலும், ஊடகங்கள் வாயிலாக செய்தி வெளியே வர நேற்று நேற்று மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.
இந்த நிலையில், சம்பவம் நிகழ்ந்த போது மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் இருந்த மூன்று பணி மருத்துவர்கள் மற்றும் ஒரு செவிலியருக்கு மேட்டுப்பாளையம் தலைமை மருத்துவர் மூலம் தமிழக சுகாதாரத்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஊசி முறிந்தது எவ்வாறு நடந்தது?, அப்போது அதனை பரிசோதிக்க தவறியது யார்? இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் யார்? என பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளதாகவும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில் விரைவில் விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.