அத்தப்பூ கோலமிட்டு, விஷூக் கனி படையலிட்டு ஓணம் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவையில் உள்ள ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருவதுடன், வீடுகள் தோறும் வண்ணமயமாக அத்தப்பூ கோலமிட்டு, விஷூக் கனி படையலிட்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவையில் உள்ள ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருவதுடன், வீடுகள் தோறும் வண்ணமயமாக அத்தப்பூ கோலமிட்டு, விஷூக் கனி படையலிட்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

வாமன அவதாரத்தில் உலகை அளந்த மகாவிஷ்ணுவுக்கு, கேரளத்தை ஆண்ட மகாபலி சக்கரவர்த்தி, தன் தலையை கொடுத்தார் என்பது புராண வரலாறு. பாதாளத்துக்குச் சென்ற மகாபலி மன்னன், மகா விஷ்ணுவின் அருளால், ஆண்டுதோறும் சிங்க மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரத்தில், தனது நாட்டு மக்களைக் காண வருவதாகவும், அந்த நாளே ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகைக்கு 10 நாட்களுக்கு முன்பே, கொண்டாட்டங்கள் தொடங்கி நடைபெறும். மகாபலி மன்னனை வரவேற்க, மக்கள் தங்களின் வீட்டு வாசலில் அத்தப்பூ கோலமிட்டு, வீடுகளில் படையலிட்டு வழிபடுவது வழக்கம். 

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கடந்த பத்து நாட்களாகவே ஓணம் பண்டிகை களைகட்டியது. ஓணம் பண்டிகை நாளான இன்று கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள், ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது. காலை முதலே புத்தாடை அணிந்து ஏராளமான பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்து ஒருவருக்கொருவர் ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து மாலை வரை கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளது. மேலும், மதியம் ஓணம் சத்யா எனப்படும் அன்னதானமும் கோவிலில் வழங்கப்பட உள்ளது. வீடுகளிலும், கோவில்களிலும் அத்தப்பூ கோலமிட்டு, விஷூக் கனி படையலிட்டு வண்ணமயமான ஓணம் பண்டிகையை மக்கள் உற்சாகமாக கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...