நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், பல்வேறு மலையாள அமைப்புகள் சார்பில் ஓணம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், பல்வேறு மலையாள அமைப்புகள் சார்பில் ஓணம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கேரளாவில் ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக கேரளா மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ள, நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் போன்ற பகுதிகளில் உள்ள மலையாள மக்கள் வெகுவிமர்சையாக ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். தனியார் கல்லூரிகளில் கடந்த இரண்டு நாட்களாக மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதே போன்று இன்று ராணுவ முகாம், ரயில் நிலையம், கேரளா சமாஜம் சார்பில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. அத்தப்பூ கோலமிட்டு ஓரே மாதிரியான வண்ண உடையணிந்து, செண்டை மேளத்திற்கு ஏற்ற நடனம் ஆடி ஓணம் பண்டிகையினை சிறப்பாக கொண்டாடினர்,

இந்த கொண்டாட்டத்தில் சுற்றுலா பயணிகளும் பங்கேற்று, பூக்கோலம் முன்னின்று புகைப்படங்கள் எடுத்து சென்றனர். தொடர்ந்து, 'ஒண சத்யா' எனப்படும் விருந்திற்கான ஏற்பாடுகளும் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.