கோவை : வெளிநாடு முதலீடுகளை ஈர்த்து வந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோவை விமான நிலையத்தில் செண்டை மேளம் முழங்க,மலர் தூவி அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் உட்பட பல்வேறு வெளிநாடுகளில் 14 நாட்கள் அரசுமுறை பயணம் மேற்கொண்ட பின் இன்று காலை சென்னை திரும்பினார். பின்னர், சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை கோவை வந்த அவருக்கு விமான நிலையத்தில் அதிமுக தொண்டர்கள் மற்றும் விவசாய அமைப்பு நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். செண்டை மேளம் முழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மலர் மாலை அணிவித்தும், தென்னை பூக்களை கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் தொண்டர்களின் வாழ்த்துகளை பெற்றுக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி கார் மூலம் சேலம் சென்றார். விமான நிலைய சாலையின் இருபுறமும் கூட்டமாக கூடி நின்ற அதிமுகவினர் முதலமைச்சருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.