இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் சீட் பெல்ட் அணியாததால் அபராதம் விதித்த போலீஸ்

கோவை : கோவை அடுத்த க.க.சாவடி அருகே இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் சீட் பெல்ட் அணிய வில்லை என போலீசார் அபராதம் விதித்த ரசீது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை : கோவை அடுத்த க.க.சாவடி அருகே இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் சீட் பெல்ட் அணிய வில்லை என போலீசார் அபராதம் விதித்த ரசீது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை காளப்பட்டி அருகேயுள்ள கடைவீதியை சேர்ந்தவர் கார்த்திக்.இவர் இருசக்கர வாகனத்தில், கடந்த 7-ம் தேதி வேலந்தாவளம் சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில், வேலந்தாவளம் அருகே க.க.சாவடி போலீசார் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த கார்த்திக்கை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதில் தலைக்கவசம் அணியாமல் வந்த இளைஞர் கார்த்திக்கு போலீசார் அபராதம் விதித்தனர். ஆனால், கார்த்திக்கிற்கு காவல்துறையினர் சார்பில் வழங்கப்பட்ட ரசீதில் தலைக்கவசம் அணியவில்லை என்பதற்கு பதிலாக, சீட் பெல்ட் அணியாமல் வந்தார் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தநிலையில், இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞருக்கு போலீசார் சீட் பெல்ட் அணிய வில்லை என தங்களது ரசீதில் குறிப்பிட்டிருந்தது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...