நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை அரைக்கும் இயந்திரம் அமைக்கும் பணிக்கு சுற்றுலா பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர் 1 முதல் குளிர்பான பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களுக்கு முழு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதை அடுத்து பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.

இதில் சுற்றுலா பயணிகள் அதிகமாக வரும் உதகை நகரில் முக்கிய சுற்றுலா தலங்களான அரசு தாவரவியல் பூங்கா நுழைவு வாயில் பகுதியில் பிளாஸ்டிக் அரைவை இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இதில் குடிநீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பான பாட்டில்களுடன் வரும் சுற்றுலா பயணிகள் அந்த இயந்திரத்தில் பிளாஸ்டிக் பாட்டிலை இயந்திரத்தின் உள் போடுவதால் அரைக்கப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில் துகள்கள் மற்றும் தாவர கழிவுகள் மூலம் உரமாக மாற்றப்பட்டு தாவரவியல் பூங்காவில் உள்ள பல்வேறு பூச்செடிகளுக்கு உரமாக பயன்படுத்தப்படுகிறது.
இந்த திட்டம் சுற்றுலாப் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தை மாவட்டம் முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களில் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.