குப்பை கிடங்கிலிருந்து ஏற்படும் துர்நாற்றம் மற்றும் நோய் தொற்றை கண்டித்து 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல்

நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் உதகமண்டலம் நகராட்சிக்குட்பட்ட குப்பைகளை பிரிக்கும் கிடங்கிலிருந்து ஏற்படும் கழிவுகளின் துர்நாற்றம் பல்வேறு நோய் உபாதைகளை ஏற்படுத்துவதாக கூறி 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் உதகமண்டலம் நகராட்சிக்குட்பட்ட குப்பைகளை பிரிக்கும் கிடங்கிலிருந்து ஏற்படும் கழிவுகளின் துர்நாற்றம் பல்வேறு நோய் உபாதைகளை ஏற்படுத்துவதாக கூறி 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



உதகை நகராட்சி மூலம் தினந்தோறும் சேகரமாகும் குப்பைகள், தீட்டுக்கள் பகுதியில் உள்ள குப்பை கிடங்கிற்கு எடுத்து செல்லப்படும். ஆனால் கடந்த 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்த குப்பை கிடங்கிற்கு குப்பைகள் எடுத்துச் செல்வது குறைக்கப்பட்டு நகராட்சி மூலம் திடக்கழிவு மேலாண்மை கிடங்குகளுக்கு குப்பைகளை எடுத்து சென்று தரம் பிரிக்கும் பணியும் இந்த குப்பை கிடங்கில் நடைபெற்று வந்தது.

காந்தல் பகுதியில் உள்ள 2 திடக்கழிவு மேலாண்மை குப்பை கிடங்கில் நாள்தோறும் நகராட்சி மூலம் சேகரமாகும் குப்பைகளை பிரிக்கும் பணியானது இன்றுவரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குப்பைகளை பிரித்து அதில் இருந்து எடுக்கும் உரமானது பல்வேறு விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் நகராட்சி மூலம் கொடுக்கப்பட்டு வருகின்றது.



இப்படி கிடங்கில் தரம் பிரிக்கப்படும் குப்பைகளால் அப்பகுதியில் வசிக்கும் சுமார் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் பல்வேறு நோய் உபாதைகளுக்கு ஆளாவதோடு நாள்தோறும் திடக்கழிவு மேலாண்மை குப்பைக்கிடங்கு வழியே செல்லும் பள்ளி குழந்தைகளுக்கும் பல்வேறு நோய் உபாதைகள் ஏற்படுவதாக பொதுமக்கள் நகராட்சி மீது குற்றம் சாட்டினார்.

ஆரம்ப காலத்தில் இங்கிருந்து குப்பைகள் மூலம் எந்த ஒரு நோயும் துர்நாற்றமும் இருக்காது என நகராட்சியில் கூறியிருந்த நிலையில், தற்பொழுது நாளுக்கு நாள் நகரில் சேகரமாகும் குப்பைகளை இங்கு கொண்டுவரபடுவதால் துர்நாற்றம் அதிகமாக வீசுவதாக கூறி இப்பகுதியில் சாலை மறியலில் இன்று ஈடுபட்டனர்.

இனி இது பாேன்று நடைப்பெறாமல் பார்த்துக் காெள்வதாக அதிகாரிகள் அளித்த உறுதிக்குப் பின் பாேராட்டம் கைவிடப்ட்டது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...