கோவையில் மூன்றாவது திருமணம் செய்ய முயன்ற கல்யாண மன்னனுக்கு தர்ம அடி கொடுத்த இரண்டு மனைவிகள்

கோவை : கோவை மாவட்டம் சூலூர் அருகே மூன்றாவது திருமணம் செய்ய முயன்ற கல்யாண மன்னனுக்கு முதல் இரண்டு மனைவிகள் தர்ம அடி கொடுத்த சம்பவம் தொடர்பான காட்சிகள் வெளியாகி உள்ளது.


கோவை : கோவை மாவட்டம் சூலூர் அருகே மூன்றாவது திருமணம் செய்ய முயன்ற கல்யாண மன்னனுக்கு முதல் இரண்டு மனைவிகள் தர்ம அடி கொடுத்த சம்பவம் தொடர்பான காட்சிகள் வெளியாகி உள்ளது.



கோவை சூலூர் நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் தினேஷ்( 26). இவர் ராசிபாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் திருப்பூர் கணபதி பாளையத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவரது மகள் பிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.



இந்நிலையில், அரவிந்த் திருமணமான 15 நாட்களிலேயே தனது மனைவியை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி உள்ளார். இதைத்தொடர்ந்து, பிரியதர்ஷினி சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சூலூர் போலீசார் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கும் புகார் அளித்தநிலையில் எந்த நடவடிக்கையும் இல்லாததால் அவர் தனது தந்தை வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில், அரவிந்த் கல்யாண வலைதளம் மூலம் கரூர் மாவட்டம் பசுபதி பாளையத்தை சேர்ந்த ஐய்யப்பன் என்பவரது மகள் அனுப்பிரியா (23) என்பவரை கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

முதல் மனைவி இருப்பதை மறைத்து இரண்டாவது திருமணம் செய்துகொண்ட அரவிந்த் இரண்டாவது மனைவி அனுப்ரியாவையும், முதல் மனைவியை கொடுமைப்படுத்தியது போலவே கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இரண்டாவது மனைவி அனுப்பிரியாவும் தொல்லை தாங்க முடியாமல் தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், அரவிந்த் மீண்டும் கல்யாண வலைத்தளம் மூலம் மூன்றாவது திருமணம் செய்ய விண்ணப்பித்துள்ளதாக இரண்டு மனைவிகளுக்கும் தெரியவந்துள்ளது.

இந்த தகவலை அறிந்த முதல் மனைவி பிரியதர்ஷினி குடும்பத்தினரும், இரண்டாவது மனைவி அனுப்பிரியா குடும்பத்தினரும் அரவிந்தனிடம் விசாரித்த போது, அப்படித்தான் செய்வேன் உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.



இதைத்தொடர்ந்து அரவிந்தனின் இரண்டு மனைவிகளும் அரவிந்தின் தந்தை சௌந்தர்ராஜை அழைத்துக் கொண்டு அவர் பணியாற்றி வரும் தொழிற்சாலைக்கு சென்றனர். பின்னர் தனது கணவரை வெளியே விட நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர். ஆனால் அரவிந்தை வெளியே விட அவர் பணிபுரிந்து வரும் கம்பெனி நிர்வாகம் மறுத்துவிட்டது.

பின்னர், காவல் துறையின் அறிவுரையின் பேரில் அரவிந்தன் காவல் நிலையத்திற்கு ஆஜராக செல்லும் பொழுது அரவிந்தனின் முதல் மனைவியும் இரண்டாவது மனைவியும் அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் தகவலறிந்த போலீஸார் அரவிந்தனை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அதைத்தொடர்ந்து பிரியதர்ஷினி மற்றும் அனுப்பிரியா ஆகியோர் சூலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் மனைவிக்குத் தெரியாமல் இரண்டாவது மனைவியை திருமணம் செய்து இருவருக்கும் தெரியாமல் மூன்றாவது மனைவியை திருமணம் செய்ய முயன்ற கணவனுக்கு மனைவிகள் தர்ம அடி கொடுத்த சம்பவம் தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...