திருப்பூர் : திருப்பூரில் மது வாங்க பணமில்லாததால் மது பாட்டில்களால் தன்னை தாக்கி கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் : திருப்பூரில் மது வாங்க பணமில்லாததால் மது பாட்டில்களால் தன்னை தாக்கி கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் செட்டிபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி(40) என்பவர் இன்று காலை மது வாங்க சென்றுள்ளார். அவரிடம் போதிய பணம் இல்லாததால் டாஸ்மாக் கடையில் மது பாட்டில் தர மறுத்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி அங்கிருந்த காலி பாட்டில்களை எடுத்து உடைத்து தன்னை தாக்கி கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். உடனடியாக டாஸ்மாக் கடையினர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். குடியினால் தன் குடும்பம் சொத்து அனைத்தையும் இழந்த எனக்கு தற்போது ஒரு பாட்டில் கூட தர மறுக்கின்றனர் என கூறி ரத்தம் வருமளவு தாக்கிக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து, போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டும் அவர் மருத்துவமனை வர மறுத்துவிட்டார். இந்த சூழ்நிலையை புரிந்து கொண்ட பல்லடம் உதவி காவல் ஆய்வாளர் விஜயகுமார் மூர்த்தியை முதலுதவி சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.