கோவை : சர்வதேச அளவில் புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்த எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் சார்பில் கோவையில் வரும் அக்டோபர் 6ம் தேதி மாரத்தான் போட்டி நடக்க உள்ளது.

எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் (ELGIEQUIP), உலகின் முன்னணி தலைசிறந்த ஏர் கம்ப்ரஷர் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. கோவையில் வரும் 2019 அக்டோபர் 6ம் தேதி நடக்கும் மாரத்தான் போட்டியை நடத்துவதில் முன்னின்று உதவி புரிகிறது. பொதுமக்களிடையே புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கோயம்புத்துார் கேன்சர் பவுண்டேஷனுக்கு உதவ முன் வந்துள்ளது. வட அமெரிக்காவில் உள்ள எல்ஜி நிறுவனம், சூசன் ஜி கோமனின், ‘ரேஸ் பார் தி கியூர்’ என்ற போட்டிக்கு உதவி செய்கிறது. அமெரிக்காவில் உள்ள சார்லெட் நகரில் நடக்கும் இந்த மாரத்தான் போட்டியும் மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சைக்கு நிதி திரட்ட நடத்தப்படுகிறது. இரண்டு மாரத்தான் போட்டியும், பொதுமக்களிடையே ஆரோக்கியத்தையும், வாழ்வியல் தொடர்பான நோய்களை தவிர்க்கவும், புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடத்தப்படுகிறது. எல்ஜி பணியாளர்கள், உலக அளவில் இதற்கென ‘எது உங்களதுமுடிவுக் கோடு’ #What’sYourFinishLine என்ற சவாலையும் ஏற்படுத்தியுள்ளனர்.

எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் குளோபல் பிராண்ட் தலைவர் அன்வர் ஜெய் வரதராஜ் கூறுகையில், ’’உலக அளவில் மனிதனின் வாழ்வியல் முறை, சுற்றுச்சூழல் காரணிகள் தான் 70–90% புற்றுநோய்க்கு காரணமாக அமைகிறது. எல்ஜியில் பணியாற்றுவோருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நலமான வாழ்க்கை முறையை மேற்கொள்ள கவனம் செலுத்தி வருகிறோம். கோயம்புத்துார் மாரத்தான் போட்டி மற்றும் சூசன் ஜி கேமான் பந்தயத்தை நடத்துவதன் மூலம், பெருமளவில் பொதுமக்கள் புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கவும், பணியாளர்கள் நலமுடன் வாழவும் நாங்கள் மீண்டும் இதை உறுதிப்படுத்துகிறோம்,’’ என்றார்.

கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் நிறுவனம், கோயம்புத்துார் மாரத்தான் தொடங்கிய 2013ம் ஆண்டு முதலே ஆதரவு அளித்து வருகிறது. கோயம்புத்துார் மாராத்தான் பந்தயத்தின் இயக்குனர் மற்றும் எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் செயல் இயக்குனர் ரமேஷ் பொன்னுசாமி கூறுகையில், ‘‘ இந்த ஆண்டின் #What’syourFinishLine? எது உங்களது முடிவுக்கோடு என்ற கருத்தானது, கம்பெனியின் இலக்காக மட்டுமின்றி, தொழிலாளர்களின் அதிகபட்ச திறனை கண்டறிய உதவுகிறது; சமுதாய மக்களுக்கு பணியாற்றவும் ஒரு அடையாளத்தை உருவாக்குகிறது. எங்களுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் இணைந்திருக்கும் பங்குதாரர்களுக்கும் இந்த பிரச்சாரத்தை விரிவுபடுத்தியுள்ளோம். பங்கேற்பாளர்களுக்கு மட்டுமின்றி, பிறரும் கோயம்புத்துார் கேன்சர் பவுண்டேஷன் பற்றி அறிய முடியும். கோமன் ரேஸ் பார் தி கியூர் என்ற மாரத்தான் போட்டி, வட அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் உள்ள சார்லெட்டில் எல்ஜி நிறுவனத்தின் ஆதரவுடன் நடக்கிறது.

இந்த ஆண்டு, ‘எது உங்களது முடிவுகோடு’ என்ற கருத்திலான பிரச்சாரத்தில் ஒவ்வொரு எல்ஜி பணியாளர், டீலர், வாடிக்கையாளர், சப்ளையர் மற்றும் சவால் மிக்க ஒரு இலக்கை (உடல் நல மேம்பாட்டுக்கான) நிர்ணயித்து, அதை சாதிப்போம். இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பியா, மத்திய கிழக்கு, தென்கிழக்கு ஆசியா, பி ரேசில், ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள எல்ஜி மற்றும் எல்ஜியின் துணை நிறுவனனங்கள், ஏடிஎஸ் எல்ஜி மற்றும் இணைந்து செயல்படும் நிறுவஜனங்கள், எல்ஜி சாயர் உள்ளிட்ட நிறுவனங்களின் குடும்பத்தினர் இந்த சவால்களில் பங்கேற்க வேண்டும். அதிகபட்ச கி.மீ, துரங்கள் நடக்கவும், ஒடவும் வேண்டும். கோவையிலும், சார்லெட் நகரிலும் அக்டோபர் 5 மற்றும் 6 ம் தேதிகளில் நடக்கும் மாரத்தான் போட்டியில் 1650 எல்ஜி பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்பர் என்றார்.