திருப்பூர் : திருப்பூரில் தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்க கோரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை பள்ளியை முற்றுகையிட்டு முன்னாள் பள்ளி மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
திருப்பூர் : திருப்பூரில் தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்க கோரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை பள்ளியை முற்றுகையிட்டு முன்னாள் பள்ளி மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

திருப்பூர் மாநகராட்சி பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த வாரம் பள்ளிக்கு மடிக்கணினிகள் வந்து விட்டதாகவும் தற்போது 11 மற்றும் 12 ம் வகுப்பில் படித்து வரும் மாணவிகளில் ஒரு சிலருக்கு மட்டும் மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மீதமுள்ள மாணவிகள் மடிக்கணினி கேட்டபோது, முன்னாள் மாணவிகளுக்கு வழங்கியது போக மீதமுள்ள மடிக்கணினிகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். ஆனால் முன்னாள் மாணவிகள் சிலருக்கு மடிக்கணினி வழங்காத நிலையில், கணினி பெறாத முன்னாள் மாணவிகள் மற்றும் தற்போது கல்வி பயின்றுவரும் மாணவிகளின் பெற்றோர்கள் இன்று பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பள்ளியின் தலைமையாசிரியர் அடுத்த வாரத்திற்குள் அனைத்து மாணவிகளுக்கும் மடிக்கணினி வழங்கப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.