மேட்டுப்பாளையத்தில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கடைக்குள் புகுந்த கார் ; 5 பேர் படுகாயம்

கோவை : மேட்டுப்பாளையம் அருகே அதிவேகமாக வந்த கார் கட்டுபாட்டினை இழந்து சாலையோர கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயமடைந்தனர்.

கோவை : மேட்டுப்பாளையம் அருகே அதிவேகமாக வந்த கார் கட்டுபாட்டினை இழந்து சாலையோர கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயமடைந்தனர்.



ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் விக்கி. கல்லூரி மாணவரான இவர், கோவை சரவணம்பட்டி பகுதியில் அறை எடுத்து சக மாணவர்களுடன் தங்கி கோவை தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவரது சகோதரர் திருமணம் நடைபெற உள்ள நிலையில், தனது சக கல்லூரி நண்பர்கள் நான்கு பேருடன் சேர்ந்து, கோவையில் இருந்து அன்னூர் சாலை வழியே மேட்டுப்பாளையம் நோக்கி யுனோவா காரை இயக்கி வந்துள்ளார் விக்கி.



அப்போது, மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் தென்திருப்பதி நால்ரோடு அருகே அதிவேகமாக கார் வந்த போது கட்டுப்பாட்டினை இழந்து, அந்த பகுதியில் சாலையோரம் வெங்காயம், இளநீர் கடைக்குள் புகுந்தது விபத்து நேரிட்டது. இதில் காரில் வந்த அருண், ஈசாக், கிஷோர்,நடராஜ் மற்றும் விக்கி ஆகிய 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மேலும், விபத்து ஏற்படுவதற்கு முன்பு கார் அதிவேகமாக சாலை ஓரத்தில் வந்த நிலையில் அதை பார்த்து சாலை ஓரத்தில் நின்ற கடைக்காரர்கள் தப்பி ஓடி தப்பியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.



விபத்தில் கடைகள் மீது கார் மோதியதில் ஒரு இருசக்கர வாகனம் மற்றும் வெங்காயம் உள்ளிட்ட பொருட்கள் சேதமானது. பின்னர் படுகாயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். கால் மற்றும் தலை பகுதிகளில் காயம் ஏற்பட்டதால் ஜந்தில் மூன்று பேர் கோவை அரசு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். விபத்து குறித்து காரமடை போலீசார்வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...