கோவை : சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தஹில்ரமானி பணியிட மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து கோவை வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த வி.கே.தஹில்ரமானி மேகலாயா உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனால், தகில் ராமணி ராஜினமா கடிதத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், நீதிபதி தஹில்ரமானி பணியிட மாற்றத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.
மேலும், நீதிபதி தஹில்ரமானி பணியிட மாற்றத்தில் அரசியல் தலையீடு இருப்பதாகவும் அவரது பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்த வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.