திருப்பூர் : திருப்பூர் காசிபாளையம் - மணியக்காரம்பாளையம் சாலையை சேர்ந்தவர் பின்னலாடை நிறுவன உரிமையாளர், சேகர்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சேகர் இறந்து விட, அவர் மனைவி ஆரோக்யமேரி பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தை எடுத்து நடத்தி வந்தார். வீட்டு கட்டிடத்தில் தரைத்தளத்தில் பின்னலாடை உற்பத்தி நிறுவனம் செயல்பட, மேல்தளத்தில் வசித்து வந்தனர். அவர், ஒரு மகள் திருமணமாகி வெளியூரில் வசிக்க, மற்றொரு மகள் கோவையில் தங்கி தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இதனால், ஆரோக்யமேரி மற்றும் மகன், ஹர்சித் மட்டும் வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், இன்று பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தில் பணியாளர்கள் அனைவரும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மேல்தளத்திலிருந்து ஆரோக்யமேரியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பணியாளர்கள் அனைவரும் ஓடிச் சென்று பார்த்த போது, வயிறு மற்றும் நெஞ்சில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ஆரோக்யமேரி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
அவர் மகன், ஹர்சித் வீட்டின் ஒரு பகுதியில் அமர்ந்து அழுது கொண்டிருந்தார். தொடர்ந்து ஊரக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஆரோக்யமேரியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பணியாளர்கள் முயன்றுள்ளனர். அதற்குள், அவர் உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஊரக போலீஸார் ஹர்சித்தை கைது செய்தனர்.

ஆரோக்யமேரியின் உடல் மீட்கப்பட்டு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மனநிலை பாதிக்கப்பட்டிருந்த ஹர்சித் வேலைக்கு செல்லாமல் பணம் கேட்டு வாக்குவாதத்தில் தாயை கொன்றதாக போலிசார் தெரிவித்தனர்.