நான்கு வருடங்களாக இருசக்கர வாகனம் வழங்காமல் இழுத்தடிப்பு : குடும்பத்தோடு தீ குளித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக மனு அளித்த மாற்றுதிரனாளி

திருப்பூர் : நான்கு வருடங்களாக மாற்றுதிறனாளிக்கான இரு சக்கர வாகனம் வழங்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாகவும், ஒரு வார காலத்திற்குள் இருசக்கர வாகனம் வழங்காவிட்டால் குடும்பத்தோடு ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக மாற்றுதிறனாளி ஒருவர் இன்று திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

திருப்பூர் : நான்கு வருடங்களாக மாற்றுதிறனாளிக்கான இரு சக்கர வாகனம் வழங்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாகவும், ஒரு வார காலத்திற்குள் இருசக்கர வாகனம் வழங்காவிட்டால் குடும்பத்தோடு ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக மாற்றுதிறனாளி ஒருவர் இன்று திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். 



திருப்பூர் முத்தனம்பாளையம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான உதயகுமார், தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் முத்தனம்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். இதனிடையே உதயகுமார் பிறவியிலிருந்தே மாற்றுத்திறனாளியாக இருந்து வந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 20-க்கும் மேற்பட்ட முறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திலும் தனக்கு இருசக்கரம் வாகனம் வேண்டி மனு அளித்து வந்துள்ளார். 

இந்த நிலையில் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்து வருவதாகக் கூறும் உதயகுமார், இனியும் மாவட்ட நிர்வாகம் இருசக்கர வாகனம் வழங்காமல் காலம் கடத்தும் பட்சத்தில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின் போது ஆட்சியர் அலுவலகத்தில் தான் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வதாக கூறினார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...