கோவை : பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி போன்றவையே இந்தியாவில் இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணம் எனவும் கோவையில் ஏற்பட்டுள்ள தொழில் நெருக்கடி குறித்து விவாதிக்க வரும் 13 ம் தேதி தொழில் பாதுகாப்பு மாநாடு கோவையில் சி.ஐ.டி.யு சார்பில் நடத்தப்பட இருப்பதாக சி.பி.எம் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவை : பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி போன்றவையே இந்தியாவில் இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணம் எனவும் கோவையில் ஏற்பட்டுள்ள தொழில் நெருக்கடி குறித்து விவாதிக்க வரும் 13 ம் தேதி தொழில் பாதுகாப்பு மாநாடு கோவையில் சி.ஐ.டி.யு சார்பில் நடத்தப்பட இருப்பதாக சி.பி.எம் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவை காந்திபுரம் சி.பி.எம் அலுவலகத்தில் அக்கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசிய போது, "வளர்ச்சிக்காக , மக்கள் நலனுக்காக பா.ஜ.க அரசு பல சாதனைகள் செய்து இருப்பதாகவும், 100 நாள் சாதனை எனவும் அமித்ஷா கூறியிருக்கின்றார் என தெரிவித்தார். ஆனால் தற்போது கடுமையான நெருக்கடியை நாடு சந்தித்து வருகின்றது எனவும், 70 ஆண்டுகளில் இல்லாத நெருக்கடி என நிதி ஆயோக் துணை தலைவர் தெரிவிக்கின்றார்", என கூறினார்.
நாடு முழுவதும் 3.50 லட்சம் ஆட்டோமொபைல் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர், குஜராத்தில் 60 ஆயிரம் டைமன்ட் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் என கூறிய அவர், இந்தியாவில் வேலை இழப்பு மிகப்பெரிய பிரச்சினையாக இப்பொது ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
ஏற்கனவே தமிழகத்தில் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து இருப்பதாக தொழில் துறை அமைச்சர் தெரிவித்து இருந்த நிலையில், இப்போது இதே நிலைமை தொடர்வதால் வேலை இழப்பு மேலும் அதிகரிக்க செய்யும் எனவும் தெரிவித்தார்.
கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு உட்பட பல்வேறு தொழில் மாவட்டங்கள் கடும் நெக்கடியை சந்திக்கின்றன என கூறிய அவர், கோவையில் என்ஜினீயரிங் சம்மந்தப்பட்ட தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு வட மாநில தொழிலாளர்கள் வெளியறும் நிலை உருவாகியுள்ளது. கோவையில் மோட்டார பம்ப் உற்பத்தி கூடங்கள் மூடப்பட்டு வருகிறது, எனவும் தெரிவித்தார்.
மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு பதிலாக மத்திய அரசு நெருக்கடியை அதிகப்படுத்தியுள்ளது என குற்றம் சாட்டிய அவர், தொழில் நெருக்கடிகள் குறித்து விவாதிக்க கோவை மாவட்ட சிஐடியு மாவட்ட குழு சார்பில் தொழில் பாதுகாப்பு மாநாடு வரும் 13ம் தேதி கோவையில் நடத்தப்படுகின்றது என தெரிவித்தார். அதில் பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன், கொடிசியா உட்பட பல்வேறு தொழில் அமைப்புகள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர் எனவும் தெரிவித்தார்.
தொழில்களுக்கான மூலதனத்தை கொண்டு வர முதல்வர் வெளிநாடு செல்வது சரியானது தான், ஆனால் தமிழகத்தில் அரசு நிர்வாகம் முறையாக செயல்படவில்லை, என குற்றம் சாட்டினார்.
கோவையின் குடிநீர் ஆதாரமாக இருப்பது சிறுவாணி அணைதான் எனவும் தெரிவித்தார். இரு மாநில முதல்வர்கள் இது குறித்து பேச இருக்கின்றனர், அதில் அவர்கள் தீர்வு காணுவார்கள் என நம்பிக்கை தெரிவித்த அவர் ,சிறுவாணி அணையில் தண்ணீர் முழுமையாக தேக்கி வைக்க மார்க்சிஸ்ட் கட்சி சம்மந்தப்பட்டவர்களிடம் ( கேரள அரசை) வலியுறுத்தும் எனவும் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.