கோவை : "தொழில்துறை பங்குதாரர்கள் மற்றவர்களைக் குறை கூறுவதற்குப் பதிலாக மாறிவரும் சந்தை சூழ்நிலைக்கு ஏற்ப மாற வேண்டும் அல்லது தொழில்துறைக்கு சாதகமான கொள்கைகளை அரசாங்கம் கொண்டு வரும் வரை காத்திருக்க வேண்டும்" என்று கவின்கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனர் தலைவர் சி.கே.ரங்கநாதன் தெரிவித்தார்.

தி ரெசிடென்சி டவர்ஸில் நடந்த சைமா டெக்ஸ்பின் 2019, 13வது தலைமை நிர்வாக அதிகாரி மாநாட்டில் உரையாற்றிய ரங்கநாதன், தற்போதைய பொருளாதார வீழ்ச்சியை நிர்வகிப்பதற்கும் எதிர்காலத்தில் நிர்வகிப்பதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று கூறினார். மேலும், இன்று நடைபெற்ற தலைமை நிர்வாக அதிகாரி மாநாட்டில் "எதிர்காலத்தை எதிர்கொள்வது" என்ற கருத்தை அடிப்படையாக கொண்டு, வெவ்வேறு தலைப்புகளில் பல்வேறு தொழிலதிபர்கள் பேசினர்.
இந்த நிகழ்வில் பேசிய ரங்கநாதன், டிஜிட்டல் மாற்றத்தால், வரும் ஆண்டுகளில் வணிகம் செய்யும் முறையில் வியத்தகு மாற்றங்கள் ஏற்படும் என்றார்.

பின்னர், கட்டமைப்பு குறித்து பேசிய ரங்கநாதன், “வணிகங்களில் சிறந்த கட்டமைப்பு இல்லை எனவும் வணிகங்கள் நெகிழ்வானதாக இருக்க வேண்டும், சரியான நபர்களை வைக்க தயங்கக்கூடாது என தனக்குத்தானே முதலீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், நம்மில் பெரும்பாலானவர்கள் 97 சதவிகித நேரத்தை பழக்கமான காரியங்களைச் செய்கிறோம், இது மற்ற விஷயங்களை சிந்திக்க விடாது" என்று கூறினார்.
சைமா தலைவர் பி.நடராஜ் வரவேற்புரை நிகழ்த்திய இந்த நிகழ்ச்சியில் சைமா உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் மற்றும் ஜவுளித் தொழில்களைச் சேர்ந்த வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.