விவசாய நிலங்கள் வழியே எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய கோரி ஆட்சியரிடம் மனு

திருப்பூர் : திருப்பூரில் விவசாய நிலங்கள் வழியே எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்


திருப்பூர் : திருப்பூரில் விவசாய நிலங்கள் வழியே எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

கோவை மாவட்டம் இருகூரிலிருந்து பெங்களூருக்கு வரை கோவை திருப்பூர் ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் விளைநிலங்கள் வழியாக பாரத் பெட்ரோலிய நிறுவனம் புதியதாக எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்துக்கு மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் அனுமதி அளித்துள்ளது. இத்திட்டம் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் திருப்பூர் கோவை ஈரோடு சேலம் தர்மபுரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இத்திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்டு உள்ள விவசாய நிலங்களின் விவரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் இத்திட்டத்தின் கீழ் சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களின் வழியே குழாய்கள் பதிக்கப்பட உள்ளன. இதனால் அப்பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்படுவதோடு விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்படுகிறது. இதனால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு விவசாய நிலங்கள் வழியாக அல்லாமல் சாலைகள் வழியாக குழாய் பதிக்க ஏற்பாடு செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் பல்வேறு விவசாய அமைப்புகள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...