நீலகிரி : கேரளாவில் தொடர் மழைபெய்த காரணத்தால், வனங்களில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டதால், நீலகிரிக்கு வௌவால்கள் அதிகளவில் இடம்பெயர்ந்து வந்துள்ளன.

கேரள மாநிலத்தில், கொட்டி தீர்த்த மழையால் கடந்த ஆண்டை போல, இந்த ஆண்டும் வரலாறு காணாத பாதிப்புகள் ஏற்பட்டன. மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை போன்று, வன உயிரினங்களும் பாதிக்கப்பட்டதுடன், உணவை தேடி இடம் பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் பகுதியில் ராணுவ முகாம் பகுதியில் ஒரு மாதத்திற்கு முன்பு சில வௌவால்கள் மட்டுமே வந்து மரங்களில் தங்கியிருந்தன. நாளுக்கு நாள் இப்பகுதியில் வவ்வால்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது இரண்டாவது முறையாக நூற்றுக்கணக்கான பெரிய வௌவால்கள் வருகைதந்துள்ளது. கடந்த ஆண்டும் கேரளாவில் மழை பெய்த போது வௌவால்கள் இதே இடத்திற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

வௌவால்கள் மூலம் வைரஸ் காய்ச்சல் பரவி விடாமல் சுகாதார அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. இதுகுறித்து சுகாதார அதிகாரிகள் பேசும் பாேது, நோய்கள் குறித்த இதுவரை எந்த வித அறிகுறியும் தென்படவில்லை என்றும் உயரதிகாரிகள் டெல்லி சென்றுள்ளதால் அவர்கள் வந்ததும் இது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும் என்றனர்.