நீலகிரி : உதகையில் பொது மக்கள் மற்றும் மாணவ, மாணவியருக்கு இடையூறாக இருக்கும் அரசு மதுபான கடையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த பாரஸ்கேட் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உதகை வந்தால் வழிபடும் ஆஞ்சநேயர் கோயில், தனியாரின் பாரதியார் பல்கலைக்கழகம், அரசு பள்ளி போன்றவை இருந்து வருகிறது. மேலும் கூட்டுறவு பால் சொசைட்டி, கூட்டுறவு நியாய விலை கடைகளும் உள்ளன.
இந்நிலையில், அப்பகுதி பேருந்து நிலையம் அருகே அரசு அனுமதி பெறாத கட்டிடத்தில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இங்கு வரும் குடிமகன்கள் சிறுநீர் கழிப்பதும், பொது வழியிலேயே மது அருந்துவதால் சுகாதார சீர்கேடு ஏற்படு வருவதோடு பள்ளி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள், பெண்கள், முதியவர்கள் என அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதனால் உடனடியாக மதுபான கடையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.