நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்துவந்த மழையால் மின் உற்பத்திக்கு ஆதாரமாக உள்ள 12 அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மலை மாவட்டம் என்பதால், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னரே நீர் பிடிப்பு பகுதிகளில் பல அணைகள் கட்டப்பட்டு நீரை சேமித்துவைக்கப்பட்டன. மேலும், இந்த தண்ணீரைக் கொண்டு தற்போது 845 மெகாவாட்டிற்கும் மேல் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் மின் உற்பத்திக்காக முக்கூருத்தி, அப்பர்பவானி, போர்த்திமந்து, பார்சன்ஸ்வேலி, அவலாஞ்சி, எமரால்டு, பைக்காரா மற்றும் பில்லூர் உள்ளிட்ட பல்வேறு அணைகள் உள்ளன. இந்த அணைகளில் உள்ள நீரை கொண்டு மாவட்டத்தில் உள்ள குந்தா மற்றும் சிங்காரா நீர்மின் திட்டங்களின் கீழ் உள்ள 12 மின் நிலையங்கள் இயக்கப்படுகின்றன. இதில், அப்பர்பவானி அணையே பிரதான அணையாக விளங்கி வருகிறது. இந்த அணையில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரைக் கொண்டு அவலாஞ்சி, குந்தா, கெத்தை, பரளி மற்றும் பில்லூர் ஆகிய 5 நீர்மின் நிலையங்கள் இயக்கப்படுகின்றன.
நீலகிரியில் உள்ள மின் நிலையங்கள் மூலம் மட்டும் சுமார் 845 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். நீலகிரிமாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் விநியோகிக்கப்படுகிறது. அணைகளில் உள்ள நீர், மின்உற்பத்திக்கு மட்டுமில்லாமல் ஒரு சில பகுதிகளில் குடிநீர் தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. .

நீலகிரி மாவட்டத்தில் மின் உற்பத்திக்கு ஆதாரமாக உள்ள அணைகள் முழு கொள்ளவான முக்கூருத்தி அணை 111 அடியும், பைக்காரா 183, கிளன்மார்கன் 148, சாண்டிநல்லா 118, பார்சன்ஸ்வேலி 141, போர்த்திமந்து 185, அப்பர்பவானி 266, எமரால்டு 212, அவலாஞ்சி 186, குந்தா 105, பில்லூர் 288, கெத்தை156 அடியான முழு கொள்ளளவை எட்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி திறந்துவிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சமவெளிப் பகுதிகளில் பவானி ஆற்றை நம்பியுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.