விவசாயி அல்லாதோர் உழவர் சந்தையில் விற்பனை செய்ய கூடாது : மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

கோவை : விவசாயி அல்லாதோர் உழவர் சந்தையில் விற்பனை செய்ய கூடாது எனவும் அங்குள்ள குளறுபடிகளை நிவர்த்தி செய்ய வலியுறுத்தியும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை : விவசாயி அல்லாதோர் உழவர் சந்தையில் விற்பனை செய்ய கூடாது எனவும் அங்குள்ள குளறுபடிகளை நிவர்த்தி செய்ய வலியுறுத்தியும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பழனிசாமி ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில், விவசாயி அல்லாதோர் உழவர் சந்தையில் விற்பனை செய்ய கூடாது என்றும் அங்குள்ள குளறுபடிகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

இது குறித்து அவர்கள் பேசுகையில், மேட்டுப்பாளையம் உழவர் சந்தை கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டதாகவும் விவசாயிகள் நலனிற்கு துவங்கப்பட்ட இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக தெரிவித்தனர். மேட்டுப்பாளையம் பகுதியில் 15க்கும் மேற்பட்ட விவசாயிகள் விளை பொருட்களை பயிரிட்டு உழவர் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் விவசாயிகள் அல்லாதோர் உழவர் சந்தையை ஆக்கிரமிப்பு செய்து உள்ளதாகவும் இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்றனர்.

மேலும், அங்கு விலைக்கு வாங்கி விவசாயிகள் என்ற போர்வையில் விற்பனை செய்பவர்கள் அரசியல் கட்சியினருடன் சேர்ந்து உண்மையான விவசாயிகளை மிரட்டுவதாக தெரிவித்தனர். இந்த பிரச்சனைகளை தீர்வு காண கடந்த ஒரு வருடமாக மனு அளித்து வருவதாகவும் நடவடிக்கை இல்லாத காரணத்தால் 4ம் தேதி உண்ணாவிரதம் மேற்கொண்டதாக கூறியவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஒரே குடும்பத்தில் இருவருக்கான அடையாள அட்டையை ரத்து செய்ய வேண்டும், பயிர் முன்பதிவு பதிவேடு வைத்து பராமரிக்க வேண்டும், உண்மைக்கு புறம்பான தவறான தகவல்களை தருபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், விவசாயிகள் கூட்டத்திற்கு பயிர் செய்துள்ள விவசாயிகள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்,சந்தையில் பயிர் செய்துள்ள விவசாயிகள் மட்டுமே உள்ள நிலை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நடைமுறை செய்ய மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...