திருச்சி : திருச்சி மாநகராட்சியில், சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ், பெரியார் நகர் பகுதியில், ரூ.81 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூங்காவை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

பின்னர், திருச்சி மாநகராட்சியில், சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ், தில்லைநகரில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகப் பணிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்களை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அஜந்தா ஹோட்டல் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகளை பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியின் போது, மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி, நகராட்சி நிர்வாக ஆணையர் (பொ) திரு.கா.பாஸ்கரன், திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, மாநகராட்சி ஆணையர் என்.இரவிச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.