கோவை : தமிழ்நாடு கேரளா தண்ணீர் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் வகையில் வரும் 26ம் தேதி இரு மாநில முதல்வர்கள் பேசி முடிவு செய்வார்கள் என சூலூரில் நடைபெற்ற ஓணம் பண்டிகை துவக்க விழாவில் கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி தெரிவித்தார்.
கோவை : தமிழ்நாடு கேரளா தண்ணீர் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் வகையில் வரும் 26ம் தேதி இரு மாநில முதல்வர்கள் பேசி முடிவு செய்வார்கள் என சூலூரில் நடைபெற்ற ஓணம் பண்டிகை துவக்க விழாவில் கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி தெரிவித்தார்.
கோவை மாவட்டம் சூலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஓணம் பண்டிகைகளின் துவக்க விழா நடைபெற்றது இந்த விழாவில் தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இதில் பேசிய துணை சபாநாயகர் தமிழகத்திலிருந்து அனைத்து பொருட்களையும் கேரளாவிற்கு தாராளமாக தமிழக மக்கள் அனுப்பி வைப்பதால் தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை பாகுபாடின்றி திறந்துவிட கேரளா அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து பேசிய கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி, தமிழக மக்கள் கேரள மக்கள் என்று வித்தியாசம் பார்ப்பதில்லை எனவும் தமிழகத்தில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக கேரள மக்கள் வாழ்ந்து வருவதாகவும் அவர்களுக்கு தேவையான அனைத்து சௌகரியங்களும் பாகுபாடின்றி வழங்கப்படும் எனவும் கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும் இது குறித்து வரும் 26-ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் கேரள முதலமைச்சர்கள் சந்தித்து பேச உள்ளதாகவும் அப்போது அனைத்து பிரச்சனைகளுக்கும் சுமூகமாக தீர்வு காணப்படும் எனவும் கூறினார்.
மேலும், இந்த விழாவில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் வேலுசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.