கோவையில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை ; தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை

கோவை : கோவை ராமநாதபுரம் அருகே உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வந்த கல்லூரி மாணவி நேற்று மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை : கோவை ராமநாதபுரம் அருகே உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வந்த கல்லூரி மாணவி நேற்று மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தையடுத்து தாளவாடி சிமிட்டஹள்ளி பகுதியை சேர்ந்த அந்தோணியின் மகள் பவித்ரா (21). இவர் கோவை சுங்கம் அருகே உள்ள தனியார் அறிவியல் கல்லூரியில் எம்எஸ்சி இறுதி ஆண்டு பயின்று வருகிறார். இவர் ராமநாதபுரம் பாரதி நகர் மூன்றாவது தெருவில் தனது சக கல்லூரி மாணவிகளுடன் ஒரு குடியிருப்பில் தங்கி வருகிறார். இந்த நிலையில், பவித்ராவுடன் தங்கியிருந்த சக மாணவிகள் சனி ஞாயிறு விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர்

ஆனால் பவித்ரா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் அவர்களின் வீடு உள்பக்கமாக பூட்டியே கிடப்பதால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் நேற்று வீட்டின் கதவைத் தட்டி உள்ளனர்.

ஆனால் கதவு திறக்கவில்லை.

இதையடுத்து வீட்டிலுள்ள ஜன்னலை திறந்து பார்த்தபோது கல்லூரி மாணவி பவித்ரா துப்பட்டாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து தகவலறிந்து வந்த ராமநாதபுரம் போலீசார் மாணவியின் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர், பவித்ரா உடன் இருந்த மாணவிகள், சக கல்லூரி மாணவிகள், பெற்றோர்கள் என அனைத்து தரப்பினரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கல்லூரி மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக மாணவிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...