கோவையில் பட்டாக் கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் ; ரவுடிகள் 3 பேர் கைது

கோவை : சரவணம்பட்டி அருகே பட்டாக் கத்தியால் கேக் வெட்டி புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட சம்பவத்தில் தொடர்புடைய மேலும் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை : சரவணம்பட்டி அருகே பட்டாக் கத்தியால் கேக் வெட்டி புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட சம்பவத்தில் தொடர்புடைய மேலும் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக ரவுடிகள் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் கேக்கை வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் காட்சிகளை சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். இந்த சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துகிறது.

அதேபோல, போலீசார் இது போன்ற பயங்கர ஆயுதங்களால் கேக் வெட்டி கொண்டாடி புகைப்படங்கள் வெளியானால் அதை விசாரித்து வழக்குப்பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கோவை சரவணம்பட்டி அருகே ரவுடிகள் சிலர் பிறந்த நாள் விழாவை பட்டாக் கத்திகள் மூலம் கேக் வெட்டி கொண்டாடி சமூக வலைத் தளத்தில் வெளியிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் சரவணம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் சுந்தரம், சதீஷ்குமார் ஆகிய இருவரை கைது செய்தனர். இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வந்தனர்.



இந்த நிலையில், கனி அமுதன், சூரிய மகேஷ்வரன், ராஜ ரத்தினம் ஆகிய மூன்று பேரையும் சிவானந்தபுரம் அருகே வைத்து போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து, கேக் வெட்ட பயன்படுத்திய 3 பட்டாக் கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சட்ட விரோதமாக கூடுதல், 25(1)(a)1969 சட்ட விரோதமாக அபாயகரமான ஆயுதம் வைத்திருந்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...