திருப்பூர் : திருப்பூரில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 17 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 67,800 ரூபாய் பணத்தையும் 7 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் : திருப்பூரில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 17 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 67,800 ரூபாய் பணத்தையும் 7 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் பெருமாநல்லூர் சாலை சாந்தி திரையரங்கம் பின்புறம் நேற்று இரவு திருப்பூர் வடக்கு காவல்துறையினர் ரோந்து பணிக்கு சென்றுள்ளனர். அப்போது, அங்குள்ள தனியார் கட்டடத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டபோது, குடிபோதையில் இருந்த நபர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களை தாக்க முயன்றுள்ளனர்.
இதையடுத்து, சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரக்குமார், சிவக்குமார் உட்பட 17 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 67,800 ரூபாய் பணம் மற்றும் 7 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.