சந்திரயான்-2 விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிப்பு : இஸ்ரோ தலைவர் சிவன்

தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட சந்திரயான் - 2 விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும் லேண்டருடன் தொடர்பு கொள்ள முயற்சித்து வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.


தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட சந்திரயான் - 2 விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும் லேண்டருடன் தொடர்பு கொள்ள முயற்சித்து வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் - 2 விண்கலம், கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது. இதையடுத்து படிப்படியாக விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிக்கப்பட்டது.

இதனை நேற்று அதிகாலை நிலவின் மேற்பரப்பில் தரையிறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. மிகவும் சவால் நிறைந்த பணியில், நிலவில் இருந்து 2.1 கி.மீ தொலைவில் இருக்கும் போது, லேண்டரில் இருந்து தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இருப்பினும் காணாமல் போன விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்த அடுத்த 14 நாட்கள் தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், தற்போது விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். அது நிலவின் மேற்பரப்பில் இருப்பதாகவும் இதனை ஆர்பிட்டர் கருவி புகைப்படம் எடுத்துள்ளதாக கூறிய அவர், லேண்டருடன் தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம் எனக் கூறியுள்ளார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...