ஹைதராபாத் : தெலுங்கானா ஆளுநராக ஹைதராபாத் ராஜ்பவனில் தமிழிசை சௌந்திரராஜன் இன்று பதவியேற்றுக் கொண்டார். இதன் மூலம் தெலுங்கானாவின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமை தமிழிசை சௌந்திரராஜனுக்கு கிடைத்துள்ளது.

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி ஐந்து மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை அறிவித்தார். அதில், தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக அறிவிக்கப்பட்டார்.

அதன் படி, இன்று ஹைதராபாத் ராஜ்பவனில் தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சௌந்திரராஜன் பதவியேற்றார். அவருக்கு, தெலுங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரகுவேந்திர சிங் சவுகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஆளுநராக பதவியேற்ற தமிழிசைக்கு, முதல்வர் சந்திரசேகர ராவ் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்த பதவியேற்பு விழாவில், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அம்மாநில அமைச்சர்கள் பங்கேற்றனர். மேலும் தமிழக அமைச்சர்கள், வேலுமணி, ஜெயக்குமார், தங்கமணி, தேமுதிக பொருளாளர் பிரேமலதா, சரத்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆளுநராக பதவியேற்ற பின்னர், தமிழிசை, தனது தந்தை குமரி ஆனந்தனிடம் ஆசி வாங்கினார்.

முன்னதாக ஆளுநராக பதவியேற்க, ஐதராபாத் வந்த தமிழிசையை முதல்வர் சந்திரசேகர ராவ் வரவேற்றார். பின்னர், நடந்த போலீசார் அணிவகுப்பு மரியாதையையும் தமிழிசை ஏற்றுக் கொண்டார்.